தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் நீலகிரி ஊராட்சியில் புதிய மின்மாற்றியை தஞ்சை எம்எல்ஏ டி கே ஜி நீலமேகம் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் தமிழகமெங்கும் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு வருகின்றது. அதில் ஒரு பகுதியாக நேற்று தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நீலகிரி ஊராட்சியில் கலைஞர் நகர் மற்றும் சரபோஜி நகர் பகுதிகளில் புதிய மின்மாற்றிகளை மக்கள் பயன்பாட்டிற்காக தஞ்சை எம் எல் ஏ டி கே ஜி நீலமேகம் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், நீலகிரி ஊராட்சி மன்ற தலைவர் வல்லமை பாஸ்கரன்,செந்தில் ,ராஜேந்திரன் ,சோமு, முருகன் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் கலந்து ொண்டனர்.