சென்னை: குற்றச் செயல்களில் ஈடுபட்டு திருந்தி வாழும் பெண்கள் தொழில் செய்வதற்காக 30பேருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான தள்ளுவண்டி, இட்லி பாத்திரங்கள் வழங்கப்பட்டது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டு திருந்தி வாழும் பெண்கள் மாற்றுத் தொழில் செய்து வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் சென்னை, புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையம் மற்றும் தமிழ்நாடு பிளக்ஸ் பேனர் அசோசியேஷன் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சென்னை, புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள சமுதாயநலக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தள்ளுவண்டி, இட்லி பாத்திரங்கள் உள்ளிட்டவை 30 பெண்களுக்கு வழங்கப்பட்டன.
இவற்றை பெற்றுக் கொண்ட பெண்கள் தங்களின் வாழ்வாதரத்திற்கு உதவியதற்காக நன்றி தெரிவித்து சென்றனர்.