தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே, செங்கமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலை பள்ளியில் மாணவர்களுக்கு சர்வதேச தண்ணீர் மற்றும் வன தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வூட்டும் விதமாக நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர்.
இதில் புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியின் இறுதியாண்டு வேளாண் பட்டப்படிப்பு மாணவிகள் கலந்து கொண்டு,
“பனிப்பாறை பாதுகாப்பு” (“Glacier Preservation”) மற்றும் “காடுகள் உணவு” என்ற கருப்பொருள் மூலமாக மாணவர்களுக்கு தண்ணீர் மற்றும் காடுகளின் முக்கியத்துவத்தையும் அதை பாதுகாக்கும் வழி முறைகளையும் எடுத்துரைத்தனர்.
மேலும், தண்ணீர் மற்றும் காடுகளை அழிப்பதால் வருங்காலத்தில் ஏற்படும் சிக்கல்களையும், அதை கட்டுப்படுத்தும் வழிகளையும் விளக்கினர்.
தலைமை ஆசிரியர் சிலம்பரசன் முன்னிலையில் மாணவர்களை உற்ச்சாகப்படுத்தும் விதமாக கட்டுரை, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.