புதுடில்லி: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி., ஹிபி ஏடன் பேசியுள்ளார். தமிழகத்தின் நலனுக்கு எதிராக கேரள காங்., எம்பி பேசுகிறார். ஆனால் தமிழ்நாட்டில் ஆளும் திமுகவுடன் காங்., கூட்டணி வைத்துள்ளது. இப்படி கூட்டணி கட்சி எம்பியே தமிழகத்திற்கு எதிராக பேசும்போது திமுகவின் நிலைப்பாடு என்ன என்று விமர்சனம் எழுந்துள்ளது.