நவம்பர் 12- இந்தியாவின் பறவை மனிதர் என அழைக்கப்படும் சலீம் அலி இதே நாளில் தான் பிறந்தார். 1896-ம் ஆண்டு பம்பாயில் பிறந்த சலீம் அலிக்கு சிறு வயதில் இருந்தே பறவைகள் மீது ஆர்வம் உண்டு.
இந்தியாவில் இருக்கும் பறவைகள் பற்றி ஆய்வு செய்து முதன் முதலில் தகவல்களை சேகரித்தவர் சலீம் அலிதான். இதன் காரணமாகவே, கோவா மற்றும் கேரளாவில் உள்ள பறவைகள் சரணாலயத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டது. இந்திய பறவையியல் ஆராய்ச்சியாளர்களின் வேதம் என கருதப்படும் தி புக் ஆஃப் இண்டியன் பேர்டு, தி பேர்ட்ஸ் ஆஃப் கட்ச், தி ஃபால் ஆஃப் எ ஸ்பாரோ, த இண்டியன் ஹில் பேர்ட்ஸ் என பல்வேறு புத்தகங்களை சலீம் அலி எழுதியுள்ளார்.
பத்ம பூஷன், பத்ம விபூஷன் உட்பட பல்வேறு விருதுகளை சலீம் அலி பெற்றுள்ளார். பறவை ஆராய்ச்சியில் பெரும் பங்களிப்பைச் அளித்த சலீம் அலி 1987-ம் ஆண்டு மரணமுற்றார்.