சென்னை: மனிதராகவே கருதவில்லை… சீமானை மனிதராகவே கருதவில்லை என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி விமர்சித்துள்ளார். கருணாநிதி, திமுகவை சீமான் விமர்சிப்பது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சீமான் பகுத்தறிவுள்ள ஒரு சராசரி மனிதர் கிடையாது என குற்றஞ்சாட்டினார். திமுகவை முன்பு விமர்சனம் செய்தவர்கள், இப்போது இருந்த இடம் தெரியாமல் போய் விட்டனர் எனவும், இது சீமானுக்கும் பொருந்தும் என்றும் எச்சரித்தார்.