தெலுங்கு நடிகர் ராணா மற்றும் தமிழ் நடிகை த்ரிஷா காதலித்ததாக பல ஆண்டுகளாக பேசப்பட்டது. ராணா, த்ரிஷா வீட்டு முகவரி மட்டுமே தெரியும் என ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார். இருவரும் காதலித்து திருமணம் செய்யலாம் என சொல்லப்பட்ட நிலையில், அது நிறைவேறவில்லை.
த்ரிஷா இன்னும் திருமணம் செய்யாமல் இருக்க, ராணா மிஹீகா பஜாஜை திருமணம் செய்துகொண்டார். த்ரிஷா விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். த்ரிஷா விவாகரத்திற்கு எதிராக இருக்கிறார். அவசரமாக திருமணம் செய்து, பின்னர் பிரிந்து செல்லும் நிலைக்கு வர விரும்பவில்லை. .
ஒருமுறை காதலித்ததை ராணா ஒப்புக்கொண்டதை ரசிகர்கள் தற்போது நினைவுகூர்ந்து வருகின்றனர். பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் “காஃபி வித் கரண்” நிகழ்ச்சியில், “த்ரிஷா என் தோழி, நாங்கள் டேட் செய்தோம், ஆனால் அது நீடிக்கவில்லை” என்று கூறினார்.
த்ரிஷாவை காதலித்ததாகவும், பிரேக்கப் ஆனதாகவும் இதுவரை பேசாத ராணா, அந்நிகழ்ச்சியில் கூறியது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. தனிப்பட்ட வாழ்க்கையை வெளியில் சொல்ல விரும்பாத த்ரிஷா, இதுபற்றி எந்த கருத்தும் கூறவில்லை. த்ரிஷா மற்றும் சிம்பு இருவரும் தற்போதும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள்.
இருவருக்கும் திருமணத்தின்மீது நம்பிக்கை இல்லை என்பதால், அவர்கள் ஒருவரையொருவர்திருமணம் செய்துகொண்டால் நல்லதாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். த்ரிஷாவின் நடிப்பு பயணம் தற்போதும் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் ஜோடியாக நடித்து இருக்கும் விடாமுயற்சி படம் பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.