இன்றைய பரபரப்பான சூழலில் வேலை செய்யும் பெண்களுக்கு சமையல் செய்வதை குக்கர் எளிதாக்குகிறது. அதனால் தினசரி சமையலுக்கு குக்கர் அவசியமாகிவிட்டது. எப்போதாவது சரியாக வேலை செய்யவில்லை என்றால், அன்றைய சமையல் தாமதமாகிவிடும்.
பொதுவாக வருடங்கள் கழித்து குக்கர் தொந்தரவு கொடுக்க ஆரம்பிக்கும். இதற்கு குக்கரை குறை சொல்லி பிரயோசனம் இல்லை. எந்த பிராண்டாக இருந்தாலும், குக்கரை சரியாக பராமரிக்காவிட்டால் பிரச்சனைகள் வரலாம். குக்கர்களில் மிகவும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று தண்ணீர் கசிவு.
இதற்கு பொதுவான காரணம் தூய்மையின்மை. சாதாரண பாத்திரங்களைப் போல குக்கரைத் தேய்க்கக் கூடாது. சுத்தம் செய்வதில் சில தந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும். இதை முறையாக கடைபிடித்தால் இந்த சிக்கலை தவிர்க்கலாம்.
ரப்பரைச் சரிபார்க்கவும்: சில மாதங்களுக்குப் பிறகு குக்கர் மூடியில் உள்ள ரப்பர் தளர்ந்துவிடும். இதனால் குக்கரில் இருந்து தண்ணீர் வெளியேறும். ரப்பர் தளர்வாக இருந்தால், அதை உடனடியாக மாற்ற வேண்டும்.
ரப்பர் விரைவில் தளர்ந்து விடாமல் இருக்க சமைத்த பிறகு குளிர்ந்த நீரில் ரப்பரைப் போட்டால், அது நீண்ட காலம் நீடிக்கும். சிலர் குக்கர் ரப்பர்களை ஃப்ரிட்ஜ் ஃப்ரீசரில் வைப்பார்கள். இப்படி செய்தால் கசிவு பிரச்னை வராது என்கின்றனர்.