கோடையின் கடும் வெப்பத்தில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க ஏர்கண்டிஷனர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் இயற்கையான முறையில் வீட்டை குளிர்விக்க சில தாவரங்கள் சிறந்த உதவியாக இருக்கும். நாசாவின் ஆய்வின்படி, ஒளிச்சேர்க்கை செயல்முறையில் தாவரங்கள் வெப்பநிலையை குறைக்கும் திறன் கொண்டவை.

இந்த தாவரங்கள் வீட்டுக்குள் காற்றை சுத்திகரித்து, ஈரப்பதத்தை சமநிலைப்படுத்தி, வாஸ்து சீர்த்திருத்தமும் செய்கின்றன. இவை வீடுகளுக்கு இயற்கையான குளிர்ச்சி மற்றும் புத்துணர்ச்சியை வழங்குகின்றன. கற்றாழை ஒரு பல்துறை பயன்பாடுடைய தாவரமாகும். இது இரவில் கூட ஆக்ஸிஜனை வெளியேற்றும் தன்மையுடன், உள்ளக காற்றில் உள்ள நச்சுகளை சுத்திகரிக்கிறது.
லக்கி மூங்கில் என்ற செடி, குறைந்த பராமரிப்பு தேவைப்படும் அதிர்ஷ்ட தாவரமாகும். இது வீட்டின் அமைதியையும் மனதின் சாந்தியையும் அதிகரிக்கின்றது. பீச் லில்லி என்ற செடி வீட்டின் அழகை கூட்டுவதோடு, காற்றில் உள்ள ஈரப்பதத்தை கட்டுப்படுத்தி மூச்சு பிரச்சனைகளை குறைக்கிறது.
சிலந்தி செடி, அதன் நீண்ட இலைகளால் காற்று சுழற்சியை மேம்படுத்துகிறது. மேலும் இது கார்பன் மோனாக்சைடு, ஃபார்மால்டிஹைடு போன்ற நச்சுகளை சுலபமாக வடிகட்டும். அரேகா பனை வீடுகளுக்கு இயற்கையான சூழலை வழங்கும். இது ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து, காற்றில் உள்ள வறட்சியை தடுத்து ஈரமான சூழலை உருவாக்குகிறது.
இந்த செடிகளை வீட்டில் பராமரிக்க சிறிது நேரம் எடுத்தாலும், நீண்ட கால பலன்கள் அதிகம். வீட்டுக்குள் இயற்கையான குளிர்ச்சியும் தூய காற்றும் தேவையென்றால் இத்தாவரங்களை வளர்த்தல் சிறந்த தீர்வாகும். இயற்கையை நம்பி வீட்டை புத்துணர்ச்சியாக மாற்ற இயலும். செலவில்லாமல், சுறுசுறுப்பான சூழலை பெறலாம்.