சென்னை: கலைஞர் மகளிருக்கு உரிமை தொகை கேட்டு மேல்முறையீடு செய்த 1.48 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் தகுதி மற்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிராகரிக்கப்பட்ட மேல்முறையீட்டு விண்ணப்பதாரர்கள் 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் மூலம் மீண்டும் மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்படும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் மேல்முறையீடு செய்தவர்களில் 1.48 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர், ஒவ்வொரு மாதமும் மேல்முறையீட்டுதாரர்களின் வங்கிக் கணக்கிற்கு உதவித்தொகை அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கான உரிமைத் தொகை மாதம் ரூ.1000 என்பதால் இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.