சென்னை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை:-
மதுரை விமான நிலையம்: 39.7 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை :- ஈரோடு: 19.6 செல்சியஸ் பதிவானது.
கடந்த நான்கு நாட்களாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் பூமி குளிர்ந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வெயிலுடன் காணப்பட்டது.
மேற்கு திசை காற்றின் வேகத்தில் மாற்றம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவை காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் ஓரிரு இடங்களில் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.