சிவகங்கை: மருது சகோதரர்கள் நினைவு தினம் நாளை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருது சகோதரர்கள் மணிமண்டபத்தில் அரசு விழாவாக அனுசரிக்கப்படுகிறது. மேலும் சமூக அமைப்பு சார்பில் காளையார்கோவிலில் உள்ள அவர்களின் நினைவிடத்தில் வரும் 27-ம் தேதி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் 30-ம் தேதி முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை நடக்கிறது. இந்நிலையில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஸ் பரிந்துரையின் பேரில் சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் 31-ம் தேதி வரை பிஎன்எஸ் 163 தடை உத்தரவை (144 தடை உத்தரவு) மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பிறப்பித்துள்ளார்.