தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஜாலியாக செலவு செய்வதற்காக ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் சூர்யா (22). ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 28ம் தேதி சவாரிக்காக இரயில் நிலையத்தில் காத்து கொண்டிருந்தார். ரயில் பயணிகள் வந்தால் சவாரிக்கு அழைத்து செல்லலாம் என்பதற்காக அவர் காத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த மூன்று சிறுவர்கள், கத்தியைக் காட்டி விரட்டி சூர்யாவிடம் இருந்து செல்போன், பணத்தை பறித்து சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சூரிய கும்பகோணம் மேற்கு போலீசில் இது குறித்து புகார் செய்தார்.
இதன் பேரில் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆட்டோ டிரைவர் சூர்யாவிடம் கத்திக்காட்டியும் மிரட்டிய மூன்று சிறுவர்களில் ரெண்டு பேர் சிக்கினர். அவர்களிடம் போலீசார் மேற்கொண்டு விசாரணையில் ஜாலியாக செலவு செய்வதற்காக இவ்வாறு பணம் பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதை எடுத்து அந்த ரெண்டு சிறுவர்களையும் கைது செய்து தஞ்சாவூரில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் போலீசார் சேர்த்தனர். மற்றொரு சிறுவனைத் தேடி வருகின்றனர்.