இதுகுறித்து, வங்கி சங்கங்களின் ஐக்கிய சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:- வங்கி ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக, வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வங்கிகளில் 5 நாள் வேலை வாரமாக அறிவிக்க வேண்டும். பொதுமக்களின் தாக்குதலில் இருந்து வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பாதுகாக்க போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

ஊழியர் நல நிதியில் இருந்து வருமான வரி பிடித்தம் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 24, 25 ஆகிய தேதிகளில் 48 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும். வங்கிகளில் வெளி வேலை மூலம் வெளியாட்களை நியமிக்கக் கூடாது. மேலும், மார்ச், 3-ல், டில்லியில், பார்லிமென்ட் முன், தர்ணா போராட்டம் நடத்தப்படும்.
இந்த போராட்டத்தில், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், ஊழியர் சங்கம், இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனம் உட்பட, ஒன்பது தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.