சென்னை: சென்னை சென்ட்ரல் – திருப்பதி உள்ளிட்ட 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்காலிகமாக ஒன்றாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்ட்ரல் – திருப்பதி, திருப்பதி – சென்ட்ரல் சப்தகிரி விரைவு ரயில்கள் இன்று முதல் 15ம் தேதி வரை முன்பதிவு செய்யப்படாத ஒரு பெட்டி மற்றும் ஒரு முன்பதிவு பெட்டி இருக்கை வசதியுடன் இயக்கப்படும்.
கோவை – திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் நாளை முதல் 15ம் தேதி வரையிலும், திருப்பதி – கோவை விரைவு ரயில் நாளை முதல் 16-ம் தேதி வரையிலும் முன்பதிவு செய்யப்படாத ஒரு பெட்டி மற்றும் ஒரு முன்பதிவு பெட்டியில் இருக்கை வசதியுடன் இயக்கப்படும்.
திருப்பதி – எஸ்எம்விடி பெங்களூரு எக்ஸ்பிரஸ் அக்டோபர் 4 முதல் 15 வரை மற்றும் எஸ்எம்விடி. பெங்களூரு – திருப்பதி விரைவு ரயில் அக்டோபர் 5-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை தலா ஒரு முன்பதிவு செய்யப்படாத பெட்டி மற்றும் ஒரு முன்பதிவு பெட்டியுடன் இயக்கப்படும்.
இந்த வகையில், சென்னை சென்ட்ரல்-திருப்பதி விரைவு ரயிலில் இரு வழித்தடங்களிலும் இன்று முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை முன்பதிவு இல்லாத பெட்டி மற்றும் இருக்கைகளுடன் கூடிய முன்பதிவு பெட்டிகள் சேர்க்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.