சென்னை: சென்னை எழும்பூர் – சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 பொதுப் பெட்டிகள் சேர்க்கப்பட உள்ளன. இது தொடர்பாக தெற்கு ரயில்வே கூறியதாவது:-
செப்டம்பர் 5-ம் தேதி தொடங்கி இயக்கப்படும் சென்னை எழும்பூர் – மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் (ரயில் எண். 22157), மற்றும் செப்டம்பர் 8-ம் தேதி தொடங்கி இயக்கப்படும் எழும்பூர் – மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் (22158), ஒரு ஸ்லீப்பர் பெட்டிக்குப் பதிலாக ஒரு 3 ஆம் வகுப்பு ஏசி பெட்டி சேர்க்கப்படும், மேலும் 2-ம் வகுப்பு பொதுப் பெட்டிகள் சேர்க்கப்படும்.

சென்னை எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் (22154) ரயிலில் செப்டம்பர் 6-ம் தேதி தொடங்கி, மறுதிசையில், சேலம்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் (22153) ரயிலில் செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கி, ஒரு 3-ம் வகுப்பு ஏசி பெட்டியும் ஒரு 2-ம் வகுப்பு பொதுப் பெட்டியும் சேர்க்கப்படும்.
மகாராஷ்டிரா மாநில தாதர்-நெல்லை எக்ஸ்பிரஸில் (11021) செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கி, மறுதிசையில், தாதர்-நெல்லை எக்ஸ்பிரஸில் (11022) செப்டம்பர் 11-ம் தேதி தொடங்கி, இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டி ஒன்று சேர்க்கப்படும்.