சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 210 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். முக்கிய திருவிழா நாட்களில் கோயில்களில் கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

முக்கிய அறிவிப்புகள்:
- கடந்த 3 ஆண்டுகளில் 1800 ஜோடிகளுக்கு கோயில்களின் சார்பில் திருமணம் நடத்தப்பட்டது. இவ்வாண்டு 1000 ஜோடிகளுக்கு 4 கிராம் தங்கத் தாலியுடன் ரூ.70,000 மதிப்பில் திருமண உதவிகள் வழங்கப்படும்.
- ஒருகால பூசைத் திட்டம் 18,000 கோயில்களில் நடைமுறையில் உள்ளது. மேலும் 1000 கோயில்களில் இது விரிவாக்கப்படும்.
- அர்ச்சகர்களின் ஊதியம் ரூ.1000 லிருந்து ரூ.1500 ஆக உயர்வு.
- திருவிழா நாட்களில் முக்கிய கோயில்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும்.
- அர்ச்சகர், பூசாரி, ஓதுவார் உள்ளிட்டோர் நலனுக்காக இருசக்கர வாகன மானியம் வழங்கப்படும்.
- பல கோயில்களில் தினசரி மற்றும் விழா நாட்களில் அன்னதானம் விரிவாக்கம் செய்யப்படும்.
- வயது முதிர்ந்த பக்தர்களுக்கான ஆன்மிகப் பயண திட்டங்கள் விரிவாக்கம் செய்யப்படும்.
- மாற்றுத்திறனாளிகள் மற்றும் பின்தங்கிய பக்தர்களுக்கு பயண மற்றும் தரிசன வசதிகள் மேம்படுத்தப்படும்.
- பழமை வாய்ந்த கோயில்களின் பாதுகாப்பு மற்றும் பணியாளர்களுக்கான நலத்திட்டங்கள் அதிகரிக்கப்படுகின்றன.