திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர், மணலி, மாதவரம் மண்டலங்களில் குடியிருப்பு பகுதிகளிலும், சாலைகளிலும் பட்டாசு கழிவுகள் குவிந்துள்ளன. இதையடுத்து பட்டாசு கழிவுகளை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.
ஒரே நேரத்தில் பட்டாசு கழிவுகள் குவிந்ததால், நகராட்சி அதிகாரிகள் கூடுதல் துப்புரவு பணியாளர்களை நியமித்து இரவு நேரங்களில் துப்புரவு பணி மேற்கொண்டனர்.
இதன்படி திருவொற்றியூரில் 11.2 டன், மணலியில் 5 டன், மாதவரத்தில் 9.75 டன் பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட்டு கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள எரிக்கும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.