சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகளும், சென்ட்ரலில் நடைமேடை விரிவாக்கப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக மூன்று ரயில்களின் சேவை தற்காலிகமாக மாற்றப்பட்டு மறு உத்தரவு வரும் வரை இயக்கப்படும் சென்னை எழும்பூர் – ராஜஸ்தான் ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் (22663) நவ. 23-ம் தேதி முதல் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 2:50 மணிக்கு புறப்படும்.
ஜோத்பூர் – எழும்பூர் எக்ஸ்பிரஸ் (22664) தாம்பரத்திற்கு நவ. 26 முதல் இயக்கப்படும். சென்னை எழும்பூர் – நாகர்கோவில் விரைவு ரயில் (12667) 21-ம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இரவு 7:30 மணிக்கு இயக்கப்படும். இதேபோல் நாகர்கோவில் – எழும்பூர் விரைவு ரயில் (12668) 22-ம் தேதி முதல் தாம்பரத்துக்கு இயக்கப்படும்.
சென்னை எழும்பூர் – செங்கோட்டை சிலம்பு விரைவு ரயில் (20681) நவ. 20 முதல் தாம்பரத்தில் இருந்து இரவு 8:55 மணிக்கு இயக்கப்படும். செங்கோட்டை– தாம்பரம் எக்ஸ்பிரஸ் (20682) நவம்பர் 21 முதல் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.