சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான 2 சுற்று கவுன்சிலிங் நிறைவடைந்துள்ளது.
இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவில் 681 எம்பிபிஎஸ் இடங்களும், 971 பிடிஎஸ் இடங்களும் காலியாக இருந்தன. இந்த இடங்களை நிரப்புவதற்கான 3-வது சுற்று (மாப் அப்) கலந்தாய்வுக்கான பதிவு சுகாதாரத் துறை இணையதளமான https://tnmedicalselection.net/ இல் நேற்று தொடங்கியது.
கல்லூரி இடங்களை 12 முதல் 14 வரை தேர்வு செய்யலாம். ரேங்க் வாரியாக வெற்றி பெற்றவர்களின் விவரமும் 17-ம் தேதி வெளியிடப்படும்.
இடஒதுக்கீடு பெற்றவர்கள் வரும் 23-ம் தேதிக்குள் அந்தந்த கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.