சென்னை: வங்கதேசத்தில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 42 மாணவர்கள் சென்னை வந்தனர். பங்களாதேஷில் வேலை வாய்ப்பு மற்றும் இட ஒதுக்கீடு தொடர்பான போராட்டங்கள் மற்றும் கலவரங்களால் வங்கதேசத்தில் படிக்கும் தமிழக மாணவர்கள் சிக்கிக் கொண்டனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவையடுத்து, தமிழக நலன் மற்றும் மறுவாழ்வு இயக்குனரகம் மூலம் வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. வாட்ஸ்அப் குரூப்கள் அமைக்கப்பட்டு அங்குள்ள தமிழ் மாணவர்களை திரட்டி மீட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று இரவு கொல்கத்தா மற்றும் கவுகாத்தியில் இருந்து விமானம் மூலம் 42 மாணவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
சென்னை விமான நிலையம் வந்த மாணவர்களை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். அப்போது, அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிருபர்களிடம் கூறுகையில், “வங்கதேசத்தில் தமிழக மாணவர்களை மீட்டு அவர்களது வீடுகளுக்கு அனுப்பும் பணி 4 நாட்களாக நடந்து வருகிறது.
21ம் தேதி 49 மாணவர்களும், 22ம் தேதி 82 மாணவர்களும், 23ம் தேதி 35 மாணவர்களும், தற்போது 42 மாணவர்களும் என மொத்தம் 208 மாணவர்களை அழைத்து வந்துள்ளோம் என்றார்.