சென்னை: தமிழகத்தில் பதிவாகாத நிலங்கள் மற்றும் நில அபகரிப்பு சட்டங்கள் தொடர்பாக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு முதல்வர் ஸ்டாலினிடம் முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இக்கோரிக்கையில், தற்போதுள்ள சட்டங்களை மாற்றி, தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு புதுப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடலோரப் பாதுகாப்பு மண்டலங்கள், மலைப் பாதுகாப்புப் பகுதிகள், தொல்லியல் மற்றும் பாரம்பரியப் பாதுகாப்புப் பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் நிலப் பதிவு கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனால் மக்கள் தங்கள் சொத்துக்களை அவசர தேவைகளுக்கு விற்க முடியாமல் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, மாநில அரசு, சொத்து பரிமாற்ற சட்டத்தில் தேவையான திருத்தங்களை செய்து, பொது நலனை பாதுகாக்கவும், பதிவு செய்யாத மனைகளை பதிவு செய்ய அனுமதிப்பது அவசியம்.