கல்பாக்கம்: நாடு முழுவதும் நாளை 79 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் பகுதிகளில் மத்திய அரசு பாதுகாப்பை தீவிரபடுத்தியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் சென்னை அணுமின் நிலையம் பாபா அனு ஆராய்ச்சி மையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பாவினி உள்ளிட்ட பல்வேறு அணுசக்தி துறை சார்ந்த பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.
தற்போது அங்கு பாதுகாப்பு கருதி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள்ளே செல்லும் நுழைவு வாயில் பகுதியில் இருசக்கர வாகனம் கார் வேன் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே அணுமின் நிலைய வளாகத்தின் உள்ளே அனுப்பபடுகிறது.
குறிப்பாக வெடிகுண்டு சோதனைக்காக வேன் மற்றும் பேருந்துகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் லியோ, மேக்ஸ், எனும் இரண்டு மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து வரக்கூடிய வாகனங்களை மெட்டல் டிடெக்டர் சோதனை கருவி மூலம் சோதித்து அனுப்ப படுகிறது.