சென்னை: ஜலதோஷம் மற்றும் உயர் ரத்த அழுத்தத்திற்கான 52 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மற்றும் மாத்திரைகளை மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றன.
அதன்படி, கடந்த மே மாதம் மட்டும் 1,000க்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. ஜலதோஷம், செரிமான கோளாறுகள், கிருமி தொற்று, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் 52 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டது. அவற்றில் பெரும்பாலானவை ஹிமாச்சல பிரதேசம், தெலுங்கானா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இது தொடர்பான விவரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (cdsco.gov.in) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.