சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் நேற்று ஒரே நாளில் 57 மாவட்ட கல்வி அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் பிறப்பித்த உத்தரவு:
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதற்கு இணையான பதவிகளில் பணிபுரியும் 57 பேர் நிர்வாக நலன் கருதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இடமாறுதல் பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் நியமிக்கப்பட்ட பொறுப்பு அலுவலரிடம் தங்கள் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு, உடனடியாகப் புதிய பணியில் சேர அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அவ்வாறு கூறுகிறது. தொடக்கக் கல்வி, தனியார் பள்ளிகள், நடுநிலைப்பள்ளி என மூன்று பிரிவுகளில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், தனியார் பள்ளிகள் பிரிவில் பணிபுரியும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் அதிக அளவில் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.