வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்ய நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 6 லட்சத்து 85 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையின்படி, 1.1.2025 தகுதித் தேதியுடன் கூடிய வாக்காளர் பட்டியல் 2025-ன் சிறப்பு சுருக்குமுறை திருத்தம் நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறும். (சனி, ஞாயிறு) தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்றது.
பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், இடமாற்றம் மற்றும் ஆதார் எண் இணைக்க முதல் நாளில் மொத்தம் 6 லட்சத்து 85 ஆயிரத்து 513 பேரும், இரண்டாவது நாளில் 4 லட்சத்து 21 ஆயிரத்து 479 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.