சென்னை: சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் மட்டும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கல்வி, வேலை, வியாபாரம் போன்ற காரணங்களுக்காக சென்னையில் தங்கியுள்ளனர்.
பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் இன்று சரஸ்வதி பூஜை, நாளை ஆயுதபூஜை, நாளை விஜயதசமி, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறை என்பதால் பலர் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டனர்.
வெளியூர் செல்லும் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டவர்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்தனர். இந்நிலையில், கடந்த 9ம் தேதி முதல் பலர் சொந்த ஊருக்கு செல்ல துவங்கினர்.
அவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. குறிப்பாக, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கடந்த 2 நாட்களில் 2,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன.
சென்னையில் உள்ள கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம், தாம்பரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் அனைத்து பேருந்து நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வந்தவுடன், மக்கள் திரண்டு வந்து தங்கள் இடத்தைப் பிடித்தனர். இதையடுத்து, பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக இயக்கப்பட்டன.
அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். மாநகர பேருந்துகள், பறக்கும் ரயில்கள், மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள் மூலம் ஏராளமானோர் பேருந்து நிலையத்திற்குச் சென்றனர்.
இதனால், மாநகர பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதன்படி, மாநகர பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன. பலர் சொந்த வாகனங்களில் ஊருக்கு புறப்பட்டனர்.
இதற்கிடையே நாளை ஆயுதபூஜை என்பதால் கோயம்பேடு, பரிமுனை, தாம்பரம் உள்ளிட்ட மார்க்கெட் பகுதிகளில் பூஜை பொருட்களை வாங்க ஏராளமானோர் குவிந்தனர்.
இதன் காரணமாக வடபழனி 100 அடி சாலை, ராஜீவ் காந்தி சாலை (ஐடி காரிடார்), ஜிஎஸ்டி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை கட்டுப்படுத்தி, வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். 25 ஆயிரம் பேர் முன்பதிவு: போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், “மக்கள் சிரமமின்றி பயணிக்கும் வகையில், போதிய பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. நாங்களும் இயக்க தயாராக உள்ளோம். இதேபோல், ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்ய 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியூர் சென்றிருப்போர் திரும்பி வர வசதியாக, பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.
கடந்த 2 நாட்களாக ஏராளமானோர் புறப்பட்டு சென்ற நிலையில், நேற்று ஏராளமானோர் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதனால் சென்னையில் எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
முன்பதிவு செய்யப்படாத பொதுப் பெட்டிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.
வழக்கமான ரயில்களில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காதவர்களுக்காக சென்னையில் இருந்து கன்னியாகுமரி, தாம்பரத்தில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
இவற்றிலும் கூட்டம் அலைமோதியது. தசரா பண்டிகையையொட்டி வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களிலும் கூட்டம் அலைமோதியது. விரைவு ரயில்கள் மற்றும் விரைவுப் பேருந்துகளில் படுக்கைகளுக்கான முன்பதிவு ஏற்கனவே முடிவடைந்ததால், நீண்ட தூரப் பயணிகள் ஆம்னி பேருந்துகளைத் தேர்வு செய்தனர்.
பெரும்பாலானோர் முன்பதிவு செய்து வந்து பயணம் செய்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீர் பயண திட்டம் வகுத்து ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்த போது வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக பயணிகள் தெரிவித்தனர்.
பேருந்து நிலையத்திற்கு வந்து டிக்கெட் எடுப்பவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். கடந்த 2 நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து அரசுப் பேருந்து, ஆம்னி பேருந்து, ரயில்கள், தனியார் வாகனங்கள் என 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உற்சாகமாக சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.