விருதுநகர்: திருச்சுழி அருகே 800 ஆண்டுகள் பழமையான சாமுண்டி சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சோலண்டி கிராமத்தில் பழமையான சிலை இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த ஞானதேசிங்கன், பாலசுப்ரமணிய பிரபு ஆகியோர் மூலம் பாண்டிய நாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர்கள் புரசலூர் ரமேஷ், அருப்புக்கோட்டை ஸ்ரீதர், பேராசிரியர் தாமரைக்கண்ணன் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்று ஆய்வு செய்தபோது, 800 ஆண்டுகள் பழமையான சாமுண்டி சிற்பம் என்பது தெரியவந்தது. அவர்கள் கூறியதாவது:
சாமுண்டி சப்தமாதர்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அவர் ருத்ரனின் அம்சம். நாம் கண்டெடுத்த சிற்பம் 3 அடி உயரமும் 4 கைகளும் கொண்டது. 4 கரங்களில் சூலம், உடுகை, கபாலம், பாம்பு ஆகியவை உள்ளன. மார்பில் கபால மாலையுடன், மேற்புறம் இல்லாமல், கீழ் ஆடை மட்டும் அணிந்து, ஒரு காலை மடக்கி, மற்றொரு காலை தொங்கவிட்டு, சுகாசன கோலத்தில் அமர்ந்திருக்கும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
மேலும், கிரீடம் தலையில் அணியப்படுகிறது மற்றும் கிரீடத்தின் பின்னால் ஒரு நெருப்பு சுடர் உள்ளது. சிற்ப வடிவமைப்பை வைத்துப் பார்த்தால், இது 800 ஆண்டுகளுக்கு முந்தைய பிற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தெரிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.