கரூர்: செப். 5 ஆசிரியர் தினத்தையொட்டி, மாநில அரசால் ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது.
தொடக்க, உயர்நிலை, தனியார், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி, மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்தியன், ஆகிய 7 பிரிவுகளின் கீழ் 2024-ம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி முதல்வர்கள், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய விரிவுரையாளர்கள் உட்பட 385 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பரிசளிப்பு விழா நாளை (செப்டம்பர் 5) காலை 9 மணிக்கு சென்னை வண்டலூரில் உள்ள பி.எஸ்.அப்துல் ரஹ்மான் கிரசன்ட் பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெறுகிறது. உதயநிதி விருதுகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் வழங்கினார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தொடக்கக் கல்வித் துறையில் கரூர் மாவட்டத்தில் 2024-ம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, கரூர் மாவட்டம் சிவாயம் (மேற்கு) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ம.ரமேஷ், வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் எஸ்.மனோகர், தாந்தோணி ஒன்றியம், அரவக்குறிச்சி ஒன்றியம் ஊராட்சி ஒன்றியத்தில் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஈசனந்தம். ஆ.ச.சம்சாத்பானு 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பிரிவில் கரூர் பெரியகுளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரெ.முரளி, பாலவிடுதி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பெ.கணேசன், மாயனூர் அரசுத் தலைமை ஆசிரியர் சி.விஜயலட்சுமி ஆகிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தனியார் பள்ளி பிரிவில் சின்னதாராபுரம் ஆர்.என்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ரா.ராமசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனப் பிரிவில் மாயனூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர்கள் க.ரமணி, ஆ.சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 9 பேருக்கும் சென்னையில் நாளை (செப்டம்பர் 5) நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படுகின்றன.