ராயபுரம்: கேரட் சாப்பிட்டு விளையாடிய 2 வயது சிறுமி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பழைய வண்ணாரப்பேட்டை, தட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி பிரமிளா. இவர்களது 2 வயது மகள் லத்திஷா. பிரமிளா குழந்தையுடன் கொருக்குப்பேட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டில் இருந்த கேரட்டை லத்திஷா சாப்பிட்டாள். பின்னர் அவள் வீட்டில் விளையாடி கொண்டு இருந்தாள். திடீரென குழந்தை லத்திஷா மயங்கி விழுந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் பிரமிளா குழந்தையை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது வரும் வழியிலேயே குழந்தை லத்திஷா இறந்த விட்டதாக தெரிவித்தனர்.
குழந்தை லத்திஷா எப்படி இறந்தாள் என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.