தஞ்சாவூரை சேர்ந்த 35 வயதான பெண்மணிக்கு சிறுநீரக பிரச்சனை காரணமாக சில மாதங்களுக்கு முன்பு கருசையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு உடல் நிலை மோசமடைந்தது
அங்கு சிகிச்சையில் கிருப்தி இல்லாத நிலையில் கஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி ாெடிக்கல் சென்டர் சிறுநீரக மருத்துவரை அணுகினார். மருத்துவரின் பரிந்துரை பேரில் அவருக்கு இரத்தம் மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் செய்யப்பட்டது. மேலும் அவருக்கு மூச்சி திணறல், உணவு ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் இருந்த நிலையில் அவருக்கு டயாலிஸிஸ் சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டது.
தொடர் டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. மேலும் டயாலிஸிஸ் சிகிச்சையிலுருந்து நிரந்தர விடுபட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டது.
சிறுநீரக தானம் செய்ய அவர்களது தாயார் முன்வந்த நிலையில் தமிழக அரசின் விதிகளின் படி அனுமதி பெறப்பட்டது.
இந்த நிலையில் தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டரின் சிறுநீரக சிகிச்சை நிபுணர் டாக்டர் ஷேக் அப்துல்லாஹ் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அஸ்வின் முத்துக்குமார் அவர்களின் சிறப்பு அறுவை சிகிச்சை மருத்துவ குழுவை கொண்டு, அதி நவீன மற்றும் உயர் ரக மருத்துவ உபகரணங்களை கொண்ட அறுவை அரங்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் சிறுநீரகம் தானம் செய்தவரும் சிறுநீரகம் பெற்றவரும் நலமோடு உள்ளனர் எனவும் இவர்க்கு இனி டயாலிஸிஸ் சிகிச்சை தேவைப்படாது எனவும் சிறுநீரக சிகிச்சை நிபுணர் டாக்டர் ஷேக் அப்துல்லாஹ் அவர்கள் கூறினார். மேலும் உடல் உறுப்பு மற்றும் இரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் அவர் விளக்க உரையாற்றினார்.
டெல்டா மாவட்டங்களில் அதிநவீன மற்றும் 24 மணிநேரம் இயங்கக்கூடிய டயாலிஸிஸ் சிகிச்சை மையம் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.