பந்தலூர்: சேரங்கோடு பகுதியில் வீடு, கடைகளை சேதப்படுத்திய புல்லட் யானையை வனத்துறையினர் சுற்றி வளைத்து மயக்க ஊசி செலுத்தினர். சேரங்கோடு வனச்சரகத்துக்கு உள்பட்ட சேரங்கோடு டேண்டி, சிங்கோணா, நர்சரி, படச்சேரி, சேரங்கோடு பஜார், தட்டம்பாறை, அய்யங்கல்லி கார்னர் ஷாப், சேரங்கோடு தாண்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக புல்லட் எனப்படும் ஆண் யானை 40-க்கும் மேற்பட்ட வீடுகளை தாக்கி சேதப்படுத்தியது.
நீலகிரி மாவட்டம். மேலும் கடைகள், ரேஷன் கடைகள், விவசாய பயிர்களை சேதப்படுத்துவது, கண்ணில் தென்படும் வாகனங்களை தாக்குவது, மக்களை ஆக்ரோஷமாக துரத்துவது போன்ற செயல்களும் தொடர்ந்தன. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் இரவு அய்யன்கொல்லி பாதிரி மூலா பகுதியில் உள்ள 3 வீடுகளை தாக்கிய புல்லட் யானை அய்யன்கொல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள வனப்பகுதியில் பதுங்கி உள்ளது. சீனிவாசன் மற்றும் விஜய் என்ற கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, புல்லட் யானைக்கு மயக்க மருந்து செலுத்தி அதை பிடிக்க உதவியது.
இந்த கும்கி உதவியுடன் புல்லட் யானையை பிடிக்க ஆபரேஷன் செய்யப்பட்டது. அதன்படி நேற்று மாலை அய்யன்கொல்லி பகுதியில் பதுங்கியிருந்த புல்லட் யானைக்கு கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தினர். யானை சிறிது தூரம் சென்றதும் கும்கி யானையின் உதவியுடன் புல்லட் யானை அருகே சென்று அதன் கால்களில் கயிறு கட்டி மரத்தில் கட்டினர். பின், அதை லாரியில் ஏற்றி, தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமுக்கு கொண்டு சென்றனர்.