சென்னை: பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், ஜனவரி 17-ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது பொங்கல் பண்டிகைக்கு 6 நாட்கள் விடுமுறை கிடைக்கும். இதன் காரணமாக ஜனவரி 10-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் பலர் வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இந்த ஆண்டு அரசு எத்தனை சிறப்பு பஸ்களை இயக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது. இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.