சேலம்: சேலம் அழகுசமுத்திரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 100 நாட்களுக்கு ஒருமுறை ‘திதி போஜன நல்விருந்து’ திட்டத்தின் மூலம் பள்ளியின் கமிட்டி உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மூலம் சத்தான அறுசுவை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சேலம் அழகு சமுத்திரம் அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 180 மாணவ- மாணவிகளுக்கு தி. மு. க. கவுன்சிலர் ராஜா தனது சொந்த செலவில் அறுசுவை உணவு வழங்கினார்.
இதில் அழகுசமுத்திரம் ஊராட்சி தலைவர் அறிவழகி. பள்ளி தலைமை ஆசிரியை புவனேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.