திருவண்ணாமலை: அரசு பேருந்தில் மது பாட்டில்கள் கடத்தி வந்து சோதனையில் வசமாக அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் சிக்கினர்.
புதுச்சேரியிலிருந்து மது கடத்தி வந்ததாக அரசுப்பேருந்தை பறிமுதல் செய்த திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸார், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுகடத்தல் குறித்து கிடைத்த ரகசிய தகவலில் ஓட்டுநர், நடத்துநர் மட்டுமே பயன்படுத்தும் பெட்டியை திறந்து அதிலிருந்த 24 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை கைப்பற்றினர்.