சென்னை: வங்கக் கடலில் அக்டோபர் 14-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் குறிப்பாக அக்டோபர் 15-ம் தேதி தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று பல மாவட்டங்களில் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 12) காலை முதல் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் கரூர் திருச்சி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வரும் 14-ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போதைய வளிமண்டல சுழற்சி தீவிரமடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.