சென்னை: சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கிமீ மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும் சராசரியாக 3 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். பண்டிகை மற்றும் வழக்கமான விடுமுறை நாட்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மெட்ரோ ரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, தீபாவளி பண்டிகையையொட்டி, தேவைக்கேற்ப கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:- மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. தினசரி பயணிகளின் எண்ணிக்கை 2.50 லட்சத்தில் இருந்து 2.80 லட்சமாக 3 லட்சமாக அதிகரித்துள்ளது.
வழக்கமான விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், மற்ற நாட்களை விட, பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். தற்போது 2 வழித்தடங்களில் 6 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
அதிகபட்சமாக 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். மெட்ரோ ரயில்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.