சென்னை: பண்டிகைக் காலமும், மழைக்காலமும் ஒரே நேரத்தில் தொடங்கியுள்ள நிலையில், ரேஷன் கடைகளுக்கான முக்கிய அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது. தற்போது ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை.
இதனிடையே, இம்மாதம் முதல் கூடுதல் கோதுமை வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி சில நாட்களுக்கு முன் தெரிவித்தார். 17,100 மெட்ரிக் டன் கோதுமை வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், ரேஷன் கடைகளில் சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், இதனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் திடீர் ஆய்வு நடத்தி, அடுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார். அதேபோல், ரேஷன் கடைகளுக்கு தேவைக்கேற்ப பொருட்களை அனுப்ப வேண்டும் என்றும், குடியிருப்பு பகுதிகளில் பொருட்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் 37 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன.இதில் 6000 கடைகளுக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக் கடைகளில் எங்கு வேண்டுமானாலும் பொருட்களைப் பெறலாம்.
மழைக்காலம் துவங்கியுள்ளதால், தாழ்வான கடைகளில், பாதுகாப்பான இடங்களில் பொருட்களை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதிய ரேஷன் கார்டுகளுக்கு, விண்ணப்பதாரர்கள் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும், புதிய மின் அட்டைக்கு விண்ணப்பிப்பதற்குத் தேவையான ஆவணங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.
இதற்கு குடும்பத் தலைவர்களின் தகவல்களும், உறவினர்களின் விவரங்களும் தேவை.