ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ரகங்கள் பயன்பாட்டை தடுப்பது மற்றும் தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஊட்டியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை தாங்கினார். கூட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பை முழுமையாக அமல்படுத்துவது குறித்தும், தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்களை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கைக் கண்காணிப்பது குறித்தும், பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மின்சார இருசக்கர வாகனம் மூலம் பொதுமக்களுக்கு மீண்டும் குப்பை கொட்டுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தொடர்ந்து அதிகளவில் குப்பை கொட்டப்படும் இடங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தவும் துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் கவுசிக், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் (வளர்ச்சி) மைதிலி, உதவி இயக்குநர்கள் சரவணகுமார் (கிராம ஊராட்சிகள்), முகமது ரிஸ்வான் (நகர ஊராட்சிகள்), தாலுகா அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.