ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் 2-வது சீசன் கடைபிடிக்கப்படுவதால், ஆயுதபூஜை, விஜயதசமி, தீபாவளி பண்டிகையின் போது வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக வார இறுதி நாட்களில் சிறப்பு மலை ரயில் சேவையை தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.
இதன்படி குன்னூர்-ஊட்டி இடையே 12 மற்றும் 13-ம் தேதிகளிலும், நவம்பர் 2 மற்றும் 3-ம் தேதிகளிலும் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது.
இரண்டு சேவைகளும் முதல் வகுப்பில் 80 இருக்கைகள் மற்றும் இரண்டாம் வகுப்பில் 130 இருக்கைகளுடன் செயல்படும்.
சுற்றுலா பயணிகள் சிறப்பு மலை ரயிலில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.