சென்னை: சென்னையில் 9 வயது சிறுவனை தெருநாள் துரத்தி துரத்தி கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வானகரம் பகுதி வெங்கடேசன் தெருவை சேர்ந்தவர் 9 வயது சிறுவன் லக்ஷன். கடந்த 3ம் தேதி இரவு அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது தெருநாய் ஒன்று சிறுவனை துரத்தி சென்று கடித்துள்ளது. இதில் சிறுவனின் கை, கால் மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த சிறுவன், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.