கரூர்: கரூரில் ஏற்பட்ட நெரிசலில் அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த இளம் ஜோடி கோகுலஸ்ரீ (24), ஆகாஷ் (24) உயிரிழந்தனர்.
அவர்களின் உறவினர்கள் கதறியபடியே கூறியதாவது: அடுத்தமாதம் அவர்களுக்கு திருமணம் நடக்க இருந்தது. அவர் கரூர் மாப்பிள்ளை. நாங்க உக்கடமங்கலம். 2 மணிக்கு எங்களிடம் பேசிவிட்டுதான் இருவரும் சென்றனர். கரூர் என்பதால் சென்றார்கள். தெரிந்த வீட்டி மாடியில் இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.
இறங்கி வருவதும் போதுதான் மிதித்து கொன்று விட்டார்களே. 6.30 மணிக்கு பேசினோம். பத்திரமாக இருக்கிறோம் என்றார்களே. என் மகனையும் அழைத்துதான் சென்றனர். ஆனால் என் மகன் தப்பிவிட்டார். அடுத்தமாதம் திருமணம் நடக்க இருந்தது. ஆனால் 2 பேரும் பொண்ணு மாப்பிள்ளையாக சென்று இறந்து விட்டனர். என் மகள் சிங்கம் போல் இருப்பாள்.
கல்லூரியில் வேலை பார்த்தாள். இருவரும் கடைசியாக எடுத்த செல்பி எடுத்த போட்டோவையும் அனுப்பி வைத்தார்கள். இருவரும் வாழாமலேயே போய்விட்டார்களே என்று கதறி அழுதனர்.