மதுரை: மதுரை விமான நிலைய வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஏசி இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
மதுரை விமான நிலைய வளாகத்தில் விமான போக்குவரத்தை கண்காணிக்க புதிய கண்காணிப்பு கோபுரம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதன் கீழ் தளத்தில் ஏசி இயந்திரம் பொருத்தும் பணி இன்று நடைபெற்றது. அப்போது, அந்த பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மின் கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஏசி இயந்திரங்கள், கட்டுமானப் பொருட்கள், மின்சாதனங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமானது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ”பணியில் ஈடுபட்டவர்கள் சிகரெட் பிடிப்பதால், தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இருப்பினும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. யாருக்கும் காயமோ, உயிரிழப்போ இல்லை. ”புதிதாக வாங்கிய ஏசி இயந்திரம் உள்ளிட்ட சில பொருட்கள் மட்டும் தீயில் எரிந்து சேதமடைந்தன.