நாகை நீலாயதாக்ஷி அம்மன் கோவிலில் தியாகேசர் பெருமானுக்கு முசுகுந்த சஹஸ்ரநாம அர்ச்சனை நேற்று நடந்தது. இதில், மயிலாடுதுறை தர்மபுரம் ஆதினம் ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் கலந்து கொண்டு வழிபட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் தரிசனம் தொடர்பான பிரச்னையை பிரச்னையாக்க வேண்டாம் என இசையமைப்பாளர் இளையராஜாவே கூறியுள்ளார். யார் எங்கே நின்று வணங்க வேண்டும் என்ற மரபு உண்டு. அந்த மரபு பின்பற்றப்பட்டு வருகிறது. நான் இப்போது நாகை நீலாயதாக்ஷி அம்மன் கோயிலுக்கு வந்தபோது, இங்குள்ள சிவாச்சாரியார் எனக்கு பிரசாதம் வழங்கினார். ஒவ்வொருவருக்கும் ஒரு எல்லை உண்டு. இவ்வாறு தருமபுர ஆதீனகர்த்தா கூறினார்.