சென்னை: போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார்:
ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் தொடர்ச்சியான வார இறுதி விடுமுறை நாட்களில் தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தடுக்க, தமிழ்நாடு முழுவதும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச் சாவடி ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் மூலம், அதிக கட்டணம் வசூலித்து அனுமதியின்றி இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளை தீவிரமாகச் சரிபார்த்து, அபராதம் விதித்து, வாகனங்களை பறிமுதல் செய்து வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.