சென்னை: பதிவுத்துறை தலைவர் வெளியிட்ட அறிக்கை:- சுபமாக கருதப்படும் நாட்களில் அதிக ஆவண பதிவுகள் நடப்பதால், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அந்த நாட்களில் கூடுதல் முன்பதிவு இடங்கள் துணை பதிவாளர் அலுவலகங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. தற்போது, சித்திரை மாத சுப தினமான நாளை அதிக ஆவணப் பதிவுகள் நடைபெறவுள்ளதால், கூடுதல் முன்பதிவு இடங்களை ஒதுக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதை முன்னிட்டு, சித்திரை மாத புண்ணியநாளான நாளை, ஒரு துணைப் பதிவாளர் அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டிக்கெட்டுகளும், இரண்டு துணை பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 டிக்கெட்டுகளும், 100 முதல் 10 வரையிலான பெரிய அலுவலகங்களுக்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டிக்கெட்டுகளும் வழங்கப்படும். ஏற்கனவே வழங்கப்பட்ட 12 தட்கல் முன்பதிவு டிக்கெட்டுகளுடன் கூடுதலாக தட்கல் முன்பதிவு டிக்கெட்டுகள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்க உத்தரவிட்டுள்ளது.