சென்னை: பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று துணை பதிவாளர் அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பதிவுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:- பங்குனி மாத அமாவாசை தினமான மார்ச் 17-ம் தேதி அதிக பத்திரப் பதிவுகள் நடைபெறவுள்ளதால், கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

இதன் எதிரொலியாக, மார்ச் 17-ம் தேதி, ஒரு துணை பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு, 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், இரண்டு துணை பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களும், கூடுதலாக 2 பதிவுகள் நடக்கும் 100 அலுவலகங்களுக்கு ஏற்கனவே முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும். பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 4 தத்கல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.