சென்னை : பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
என்ன பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா திடீரென மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மகனை இழந்து ஆற்றொண்ணா துயரில் வாடும் பாரதிராஜா அவர்கள் அத்துன்பத்தில் இருந்து மீண்டு வரும் வலிமையை அளிக்க இறைவனை வேண்டுவதாகவும், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவிப்பதாகவும் தனது X பதிவில் அவர் கூறியுள்ளார்.
பாரதிராஜா மகன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் திரையுலக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.