சென்னை: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 1 நாள் மட்டுமே உள்ள நிலையில், தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால், சென்னையில் உள்ளவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
விமானங்கள், பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் மக்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சென்னையில் இருந்து செல்வதற்கான விமான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து வரும் விமான கட்டண விவரம்
* தூத்துக்குடிக்கு வழக்கமான கட்டணம் ரூ.4,109; இன்று கட்டணம் ரூ.8,976 முதல் ரூ.13,317 வரை உள்ளது உயர்வு
* கோவைக்கு ரூ.3,474 ஆக இருந்த கட்டணம் இன்று ரூ.7,872 ஆக உயர்ந்து ரூ.13,428 ஆக உள்ளது.
* சேலத்திற்கு சாதாரண நாட்களில் கட்டணம் ரூ.3,300; இன்றைய உயர்வு ரூ.8,353-ல் இருந்து ரூ.10,867 ஆக உள்ளது
* மதுரைக்கு ரூ.12 ஆயிரம் வரை கட்டணம் உயர்வு * திருச்சிக்கு விமான கட்டணம் ரூ.2,382ல் இருந்து ரூ.8,211 ஆக அதிகரித்து இன்று ரூ.10,556 ஆக உள்ளது.
* சாதாரண நாட்களில் கொச்சிக்கு விமான கட்டணம் ரூ.2,592; விமான கட்டணம் இன்று ரூ.4625-ல் இருந்து ரூ.6510 ஆக உயர்ந்துள்ளது
* சாதாரண நாட்களில் டெல்லிக்கு விமான கட்டணம் ரூ.5,475; இன்றைய கட்டணம் ரூ.5,802 முதல் ரூ.6,877 வரை உள்ளது
* கொல்கத்தாவிற்கு சாதாரண நாட்களில் ரூ.4,599 ஆக இருந்த கட்டணம், இன்று ரூ.11,296ல் இருந்து ரூ.13,150 ஆக வசூலாகியுள்ளது.
* ஐதராபாத்தில் சாதாரண நாட்களில் ரூ.2,813 வசூலிக்கப்படுகிறது, இன்று ரூ.3,535 முதல் ரூ.7,974 ஆக உள்ளது.
* அந்தமானுக்கான விமானக் கட்டணம் இன்று ரூ.5,479-ல் இருந்து ரூ.9,897 ஆக அதிகரித்து ரூ.10,753 ஆக உள்ளது.
* திருவனந்தபுரத்துக்கு விமான கட்டணம் ரூ.3,477 முதல் ரூ.6,185 முதல் ரூ.18,501 வரை உயர்த்தப்பட்டுள்ளது.