டெல்லி: டெல்லி முழுவதும் ஜனவரி 1-ம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது.
அடுத்த அக்., 31-ம் தேதி தீபாவளி பண்டிகை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால், பட்டாசு உற்பத்தி, விற்பனை, பதுக்கல் மற்றும் வெடிக்க முற்றிலுமாக தடை விதித்து டெல்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
இந்த உத்தரவின்படி, டெல்லியில் 01.01.2025 வரை ஆன்லைன் மார்க்கெட்டிங் தளங்கள் மூலம் பட்டாசுகளை உற்பத்தி செய்தல், சேமித்தல் மற்றும் விநியோகம் செய்தல் மற்றும் அனைத்து வகையான பட்டாசுகளை வெடிக்கச் செய்தல் உள்ளிட்ட அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை பின்பற்றி டெல்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அறிக்கை சமர்ப்பிக்க டெல்லி காவல்துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.